சுகாதார நிலையத்திற்கு₹1.25 கோடியில் கட்டிடம்

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, கொண்டம்பட்டி ஊராட்சி, டி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ₹1.25 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை எம்எல்ஏ கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தர்மபுரி ஒன்றிய குழு தலைவர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், மருத்துவ அலுவலர் நிவேதா, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், கந்தசாமி, மோகன், முனியப்பன், சிவா, மாதையன், ராஜூ மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சுகாதார நிலையத்திற்கு₹1.25 கோடியில் கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: