மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரை

டெல்லி: இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றுகிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். விழாவின்போது பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அந்தவகையில், நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா அதிபர் ஜோ பிடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்வில்லை. இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்பதற்காக அவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூர் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு டெல்லி வந்து தங்கும் மேக்ரான், நாளை குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். இந்நிலையில் 75வது குடியரசு தினத்தையொட்டி நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தை விட மிகவும் பழமையானது. இது மாற்றத்திற்கான காலம், தேசம் அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் உள்ளது. ராமர் கோவில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, நீதித்துறை செயல்பாட்டின் நம்பிக்கைக்கும் சான்று. மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும். நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நமக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளன. நமது இலக்கு அடைய ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு முக்கியமானது.

The post மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரை appeared first on Dinakaran.

Related Stories: