தை முதல் வெள்ளியை முன்னிட்டு தா.பழூர் சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு

 

தா.பழூர், ஜன.20: தை முதல் வெள்ளியை முன்னிட்டு தா.பழூர் கோயிலில் விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தா.பழூர் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் துர்கை அம்மனுக்கு பால், தயிர், நெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, அருகம்புல் பொடி, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விசாலாட்சி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post தை முதல் வெள்ளியை முன்னிட்டு தா.பழூர் சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: