உத்தரபிரதேசத்தில் காஜியாபாத் பெயரை மாற்ற நடவடிக்கை

காஜியாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத் நகரத்தின் பெயரை மாற்ற மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது. உபி மாநிலம் காஜியாபாத் மாநகராட்சி மேயராக சுனிதா தயாள் உள்ளார். நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் காஜியாபாத் நகரின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹர்நந்தி நகர், கஜ் பிரஸ்தா, தூதேஷ்வர்நாத் நகர் ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை வைக்கவும், இதுபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காஜியாபாத் மக்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கோரிக்கைகளை மனதில் கொண்டு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று மேயர் சுனிதா தயாள் கூறினார்.

The post உத்தரபிரதேசத்தில் காஜியாபாத் பெயரை மாற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: