ஜெயக்குமார் விளக்கம் ராமர் கோயில் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பா?

சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதை தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்குமா, இல்லையா என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும்’’ என்றார்.

The post ஜெயக்குமார் விளக்கம் ராமர் கோயில் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பா? appeared first on Dinakaran.

Related Stories: