மலரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: டிடிவி தினகரன்


சென்னை: மலரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மழை, வெள்ளம், புயல் என பேரிடர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் தமிழக மக்கள் அனைவரின் பொருளாதாரத்தை மீட்கும் ஆண்டாகவும், பொய்த்துப் போன பருவமழை, வரலாறு காணாத வறட்சி. இயற்கைப் பேரிடர்கள் என தன் வாழ்க்கை முழுவதும் துயரத்தை மட்டுமே அனுபவித்து வரும் உழவர் பெருமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆண்டாகவும் புத்தாண்டு அமையும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் முடங்கியிருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்படவும் வேலைவாய்ப்புகள் பெருகவும், பொதுமக்களின் நீண்டகால பிரச்னைக்கு நல்ல தீர்வு ஏற்படவும், பெண்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்திடவும் புத்தாண்டு பிறக்கும் இந்நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.

மலரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயர்வான வாழ்க்கையையும், நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியைத் தரும் ஆண்டாக அமையட்டும் என வாழ்த்தி தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மலரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: