நெய்யாடிவாக்கம் ஊராட்சியில் பிளஸ் 1 படிக்கும் 277 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடிவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று பிளஸ் ஒன் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்மொழி சுபாஷ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் வகையில் தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. தற்போது காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இதுபோன்று பல்வேறு நல்ல திட்டங்களை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு செயல்படுத்த இருக்கிறது. இங்கு ஏற்கெனவே ஒரு மாணவி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அதேபோல் நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண் பெறவேண்டும். எதுவுமே முயன்றால் முடியாதது இல்லை. நீங்கள் படித்து அறிவை பெருக்கி, வாழ்க்கையில் உயரவேண்டும் என்று க.சுந்தர் அறிவுறுத்தினார்.

இதேபோல் நெய்யவாடிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலவாக்கம், ரெட்டமங்கலம் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் என 3 இடங்களில் மொத்தம் 277 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அன்புராஜ், கல்யாணசுந்தரம், நதியாகோபி, சேகர், ஒன்றிய நிர்வாகிகள் தமிழ்வேந்தன், ஞானசேகரன், சுஜாதா ஜெயராமன், பாலமுருகன், ரத்தினமாலா, முரளிதரன், சந்திரன், அழகப்பன், சண்முகம், சந்தானம், விஷ்ணு, ஈ.நந்தா,வெங்கட்ராமன், செயலறிஞன், அருண்பிரசாந்த், அரவிந்தன், அஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நெய்யாடிவாக்கம் ஊராட்சியில் பிளஸ் 1 படிக்கும் 277 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: