திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்

தேனி, டிச. 28: தேனி அருகே லட்சுமிபுரத்தில், தேனி வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பாக பழனிமுருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.தேனி வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.பாண்டியராஜன் தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார் முன்னிலை வகித்தார். மருத்துவ அணி தலைவர் டாக்டர்.சுகன்யா வரவேற்றார். இம்முகாமை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன் துவக்கி வைத்தார்.

முகாமின்போது, பழனிமுருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில், பலகாரங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு திமுக அமைப்பாளர் சேக்அப்துல்லா, துணஅமைப்பாளர் அப்துல்சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: