இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காத்த முதல்வருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு

சென்னை: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி, இயற்கை பேரிடரின்போது, அச்சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியினை சிறப்புடன் ஆற்றியதற்காக பாராட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (25.12.2023) முகாம் அலுவலகத்தில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இச்சந்திப்பின்போது, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் எதிர்பாராத பெரும் தாக்குதலை நிகழ்த்தியபோது, அந்த சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் இமைப்பொழுதும் துஞ்சாது ஓய்வின்றி சுற்றிச்சுழன்று பணியாற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, பாராட்டினார். இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இச்சந்திப்பின்போது உடனிருந்தார்.

The post இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காத்த முதல்வருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: