செழிப்பாக வளர்ந்துள்ள உளுந்து செடிகள்

விராலிமலை, டிச.25:விராலிமலை அருகே தனியார் கம்பெனியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் இன்ஜின் வால்வு தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு எச்.ஆர் மேலாளராக விமல்(45) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், முக்கியமான விலை உயர்ந்த மூலப்பொருட்களின் இருப்பை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இன்ஜின் வால்வு தயாரிக்க பயன்படும் 600 கிலோ மதிப்புள்ள பொருள்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கம்பெனி நிர்வாகத்திடம் விமல் தெரிவித்து விட்டு, பின்னர் விராலிமலை போலீசிலும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கீழப் பொருவாயைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் லோகநாதன் (26), ராசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கந்தன் மகன் முருகேசன்(40), மணப்பாறை அடுத்த ஆரியம்பட்டியைச் சேர்ந்த சின்னக்காளை மகன் திருப்பதி (27), பன்னாங்கொம்பு பின்னத்தூரை சேர்ந்த கந்தசாமி மகன் ராஜேஷ்(41), மற்றும் திருட்டு பொருட்களை வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் ஞானசேகர்(29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் திருட்டு பொருட்களை வாங்கிய இரும்பு கடை உரிமையாளர் ஞானசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post செழிப்பாக வளர்ந்துள்ள உளுந்து செடிகள் appeared first on Dinakaran.

Related Stories: