அய்யம்பேட்டையில் கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

கும்பகோணம், டிச.21: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட அய்யம்பேட்டை பேரூராட்சியில் உள்ள சந்திரசேகர பிள்ளையார், சுப்பிரமணியசாமி தண்டாயுதபாணி, பிரசன்னா கோதண்ட ராமர் ஆகிய கோயில்களுக்கு தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் பொறுப்பு ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞரும், பேரூர் திமுக செயலாளருமான துளசி அய்யா தலைமை வகித்தார். மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாக குழு தலைவர் முனுசாமி வரவேற்றார். வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். அறங்காவலர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் குணசுந்தரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அய்யம்பேட்டை கோயில்கள் அறங்காவலர்களாக ரமேஷ், மதியழகன், முத்துலட்சுமி, துறைமுகம் பாலாஜி, அன்புச்செல்வம், சத்தியபிரியா கிருஷ்ணசாமி, தாமரைச்செல்வி செல்வம் ஆகியோர் அறங்காவலர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் ரகுராமன் நன்றி கூறினார்.

The post அய்யம்பேட்டையில் கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: