பூதப்பாண்டி, டிச.19: அருமநல்லூரில் இருந்து, தடிக்காரன் கோணம் செல்வதற்காக பழையாற்றின் குறுக்கே கல் பாலம் ஒன்று இருக்கிறது . இந்த பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அருமநல்லூர் பெரியகுளமும் மழை வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. அதில் ஒரு புறம் கரை அரித்து அபாய நிலையில் உள்ளது. இந்த மழை நீர் சென்றதில் சுமார் 10 ஏக்கர் நிலபரப்பில் உள்ள வாழை பயிர்கள் நாசமாகியுள்ளது. இந்த குளத்தை நம்பி சுமார் 150 ஏக்கர் பரப்பள வில் நெல் மற்றும் வாழை விவசாயம் உள்ளது.
அருமநல்லூர் ஊராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மின் மோட்டார்கள் இந்த பழையாற்று வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. இது போல் தெரிசனங்கோப்பு பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் பயிர்கள் கடந்த இரண்டு நாட்களாக தேங்கிய மழை நீரில் அழுகும் நிலையில் உள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறார்கள்.
The post அருமநல்லூர் பெரியகுளம் உடையும் அபாயம் appeared first on Dinakaran.