திருவேற்காடு, போரூர் பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏக்கள் வழங்கினர்

பூந்தல்லி: திருவேற்காடு, போரூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரண பொருட்களை ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர், மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி ஆகியோர் வழங்கினர். மிக்ஜாம் புயலால், கடந்த கடந்த 4ம்தேதி பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வெள்ள நீர் அகற்றப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்த பகுதியான திருவேற்காடு நகராட்சிக்கு உட்ட்ட சுந்தர சோழபுரம், மாதிராவேடு பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் பங்கேற்று 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் மூர்த்தி, நிர்வாகிகள் வினோத், ராஜா, குமார், சங்கர், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், போரூர் தெருவீதி அம்மன் கோயில் தெருவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்கு பகுதி 153வது வட்ட திமுக சார்பில் நேற்று நடைபெற்றது. இதில், 153வது வட்ட செயலாளர் சார்லஸ், அவைத் தலைவர் மங்களா நகர் நடராஜன் தலைமையில், மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி 1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பால்பாண்டியன், ராமலிங்கம், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆவடியில் 500 பேருக்கு உதவி: மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை, கண்ணடபாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு நேற்று வெள்ள நிவாரண தொகுப்புகளை திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், ஆவடி எம்எல்ஏவுமான சா.மு.நாசர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகரச் செயலாளர் ராஜா, ஆவடி மாநகரச் செயலாளர் சன்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பொன் விஜயன், வினோத், சிங்காரம், கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் செண்பகவல்லி ரவிச்சந்தரன், தாஸ், கேட்டரிங் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காடு, போரூர் பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: