பூதூர் ஊராட்சியில் அடிபாகத்தில் சிமென்ட் உதிர்ந்த நிலையில் மின் கம்பம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: பூதூர் ஊராட்சியில் மின்கம்பம் ஒன்று அடிப்பாகத்தில் சிமெண்ட் உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் எப்பொழுது விழுமோ பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பூதூர் பழைய காலனி பெருமாள் கோவில் தெருவில் பல ஆண்டுகளாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வழியாக இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு மின்கம்பம் மட்டும் அடிபாகத்தில் சிமெண்ட் கல் உதிர்ந்த நிலையில் கம்பி மட்டும் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புது மின்கம்பத்தை வைக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அதிர்ஷ்டவசமாக தற்போது பெய்த மிக்ஜாம் புயல் காரணமாக மேற்கண்ட மின்கம்பம் அதிர்ஷ்டவசமாக கீழே விழவில்லை. அந்த மின்கம்பம் எப்பொழுது கீழே விழுந்து விடுமோ என அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேற்கண்ட மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டுமென இப்பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

The post பூதூர் ஊராட்சியில் அடிபாகத்தில் சிமென்ட் உதிர்ந்த நிலையில் மின் கம்பம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: