அதன்படி முதல் கட்டமாக திருவள்ளூர் அருகே பீமன்தோப்பு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் இல்லம் தேடி நேரில் சென்று கலெக்டர் த.பிரபு சங்கர் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இதேபோல் அந்த ஊராட்சியில் 23 மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு நேரில் தலா 5 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை, ரொட்டி மற்றும் பிஸ்கட்ஸ் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சேகர், அன்பரசு, சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பேச்சு பயிற்சியாளர் காயத்திரி, அலுவலக பணியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
The post இல்லம் தேடிச் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.
