×

நாகூர் கந்தூரி விழா சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்

நாகப்பட்டினம்: புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் 467வது கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 24ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள். வரும் 14ம் தேதி மாலை நாகப்பட்டினத்தில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்காவை சென்றடையும். அதே போல் வரும் 23ம் தேதி இரவு நாகப்பட்டினத்தில் இருந்து சந்தனகூடு ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்காவை சென்றடையும்.

The post நாகூர் கந்தூரி விழா சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nagor Khanduri festival ,Nagapattinam ,467th Ganduri festival ,Lord of Nagor ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா