×

ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

 

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் அமைப்பதற்கு வலியுறுத்தி, வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.

தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Government Language Law Week ,Krishnagiri ,Official Language Act Week ,Dinakaran ,
× RELATED திராவிட பொங்கல் வாலிபால் போட்டி