×

வீட்டு சிலிண்டரை கடைக்கு பயன்படுத்தியவர் மீது வழக்கு

கரூர்: வீட்டு சிலிண்டரை கடைக்கு பயன்படுத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் காந்திகிராமம் பஸ்ஸ்டாப் அருகே தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் முகமது (26), என்பவர் கைவண்டியில் ஆபத்தான முறையில சிலிண்டரை வைத்து சமையல் செய்வதாக பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு முகமது, வீட்டு சிலிண்டரை ஆபத்தான முறையில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வீட்டு சிலிண்டரை கடைக்கு பயன்படுத்தியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Gandhigram ,Dinakaran ,
× RELATED வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி