×

ஓய்வூதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மாவதி தலைமை வகித்தார். தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திறகு மாவட்ட தலைவர் கார்த்திக்கேயன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராம உதவியாளர்களுக்கு இணையாக குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ. 6750ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Tags : Karur ,Tamil Nadu Anganwadi Workers and Helpers Association ,Karur District Collector ,District Secretary ,Padmavathy ,
× RELATED பழைய அரசு மருத்துவமனை அருகே சிதிலமடைந்த சுகாதார வளாகம் சீரமைக்க வேண்டும்