×

அசாம் மக்கள் நிலங்களை வெளியாட்களுக்கு விற்க கூடாது: சபதம் ஏற்குமாறு முதல்வர் ஹிமந்தா அழைப்பு

கவுகாத்தி: வௌியாட்களுக்கு தங்கள் நிலங்களை விற்க மாட்டோம் என அசாம் மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். கவுகாத்தியில் உள்ள போராகவ்னில் அசாம் போராட்ட தியாகிகள் நினைவாக கடைப்பிடிக்கப்படும் ஸ்வாஹித் திவாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், 1985 ஆகஸ்டில் அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கெதிரான ஆறுஆண்டுகால போராட்டத்துடன் தனக்கு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. இது வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்ட போராட்டம் அல்ல. தார்மீகத்தையும் அடிப்படையாக கொண்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அசாம் மாநிலம் பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும் என விரும்பினர்.

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. அசாம் இளைஞர்களின் வேலை செய்யும் விருப்பமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அசாமின் முக்கிய இடங்களில் சந்தேகத்துக்குரிய வௌியாட்கள் வர்த்தகத்தை கைப்பற்றி உள்ளனர். இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், உழைப்பின் கண்ணியத்தை போற்ற வேண்டும். அசாம் மக்கள் அனைவரும் சந்தேகத்துக்குரிய வௌியாட்களுக்கு தங்கள் நிலங்களை விற்க மாட்டோம் என சபதம் ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post அசாம் மக்கள் நிலங்களை வெளியாட்களுக்கு விற்க கூடாது: சபதம் ஏற்குமாறு முதல்வர் ஹிமந்தா அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Himanta ,Guwahati ,Assam ,Vowiyats ,
× RELATED ஜோதிடரை பார்க்க அடிக்கடி...