×

ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி

 

பெரம்பூர், டிச.10: வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 1வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (48), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவை சர்மா நகர் 10வது தெரு அருகே நிறுத்தி இருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது, ஆட்டோவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல், புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (53), மினி வேன் டிரைவர். இவர், நேற்று எருக்கஞ்சேரி மெயின் ரோடு வழியாக எஸ்.ஏ.காலனி 1வது தெரு அருகே சென்றபோது, இவரது வாகனத்தை வழிமறித்த மர்ம நபர் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது 2 சம்பவங்களிலும் ஈடுபட்டது, வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 3வது தெருவை சேர்ந்த பிரசாந்த் (21) என்பது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர். இவர்மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பதும், போதையில் ஆட்டோ மற்றும் மினி வேன் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.

The post ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Venkatesan ,Vyasarpadi SA Colony 1st Street ,Dinakaran ,
× RELATED வங்கியிலிருந்து ரிவார்டு...