×

தேசிய நூலக வார விழா

 

பெரியகுளம், டிச. 10: தென்கரை பேரூராட்சி தெ.கள்ளிப்பட்டி கிளை நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 56 வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நூலக ஆர்வலர் அன்புக்கரசன், வழக்கறிஞர் மணிகார்த்திக், பொறியாளர்கள் நித்யானந்தம், ராமநாதன்,புரவலர்கள் பக்கீர்முகமது, அரிமா பழனிராஜகோபால் நல்நூலகர்கள் குமரன், காளீஸ்வரி, நாகலட்சுமி மற்றும் வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வாசகர் வட்ட தலைவராக பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேவராஜ் தேர்வு செய்யப்பட்டார். நன்கொடை மூலம் கிளைநூலகம் மராமத்து பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விழாவில், 100 அரசு பள்ளி மாணவர்கள் நூலக உறுப்பினராக இணைக்கப்பட்டனர். புதிய புரவலர்கள் 8 பேர் சேர்க்கபட்டனர். வாசகர் வட்டம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு, அனைவருக்கும் நல்நூலகர் ஆ.சவடமுத்து நன்றி கூறினார்.

The post தேசிய நூலக வார விழா appeared first on Dinakaran.

Tags : National Library Week Festival ,Peryakulam ,Thenkari Baruradachi Th. Artist Centennial Festival ,56th ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் கண்மாய்களை...