×

ம.பி. தேர்தலில் பாஜவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்ணுக்கு அடி, உதை: முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுடன் சந்திப்பு

போபால்: மத்தியபிரதேச தேர்தலில் பாஜவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்ணை அவரது உறவினர்கள் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் சிகவுரி மாவட்டம் பர்கோடா ஹாசன் கிராமத்தை சேர்ந்த சமீனா பி(30) என்ற இஸ்லாமிய பெண் பாஜவுக்கு வாக்களித்துள்ளார். இதற்காக அவரது உறவினர்கள் சமீனாவை கடுமையாக அடித்து, உதைத்துள்ளனர்.
இதுகுறித்து சமீனா பி கூறும்போது, “சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செய்தார். மக்கள் பணி செய்த அவருக்காக பாஜவுக்கு வாக்களித்தேன். இதற்காக என் மைத்துனர் ஜாவேத்தும், அவரது மனைவியும் என்னை கடுமையாக தாக்கினர்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் சமீனா பி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை நேற்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தான் தாக்கப்பட்டதை பற்றி தெரிவித்தார். அப்போது அவருக்கும், அவரது குழந்தைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதாக சிவ்ராஜ் சவுகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

The post ம.பி. தேர்தலில் பாஜவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்ணுக்கு அடி, உதை: முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,Shivraj Singh Chouhan ,Bhopal ,Madhya ,Pradesh ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு...