×

மதுராந்தகம் அருகே பரபரப்பு பீர் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மதுபாட்டில்கள் அள்ளி சென்ற இளைஞர்கள்

மதுராந்தகம், டிச.9: மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பீர் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து, மதுபாட்டில்கள் சிறின. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே வையாவூர் கிராமத்தில் பிரபல பீர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து லாரியில் பீர் அடுக்கி வைத்த பெட்டிகளை லாரி ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கிடங்கிற்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு விழுப்புரம் மாவட்டம் ஒதயத்தூர் ரபிக் (37) சென்றார். அப்போது, லாரியின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால், லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் பள்ளத்தில் சிதறியது. இதில், சில பீர் பாட்டில்கள் உடைந்து நொறுங்கியது. அந்த வழியாக சென்ற இளைஞர்கள் லாரி கவிழ்ந்ததை கண்டு அதிலிருந்து வெளியே விழுந்த பீர் பாட்டில் பெட்டிகளை அள்ளிச்சென்றனர். தகவல் அறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த இளைஞர்களை துரத்தினர். பீர் லாரி கவிழ்ந்தது குறித்து காட்டு தீ போல் அப்பகுதியில் பரவியதை அடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் லாரியில் உள்ள பீர் பாட்டில்களை எடுத்து செல்ல சுற்றி சுற்றி வந்தனர். இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர்கள் மகிழ்ச்சி
சில மாதங்களுக்கு முன்பு பாக்கம் பகுதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இதேபோன்று பீர் ஏற்றி சென்ற லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பீர் தொழிற்சாலை பணியாளர்கள் பாதி அளவு பீர் பாட்டில்களை மட்டுமே மற்றொரு லாரியில் எடுத்து சென்றனர். மீதமுள்ள பீர் பாட்டில்களை அப்படியே விட்டு சென்றனர். இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மூட்டை மூட்டையாக பீர் பாட்டில்களை அடுக்கிக் கொண்டு சென்றனர்.

The post மதுராந்தகம் அருகே பரபரப்பு பீர் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மதுபாட்டில்கள் அள்ளி சென்ற இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Chennai-Trichy national highway ,Maduranthakam ,
× RELATED ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்...