காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு சாகுபடிக்கு உரத்தட்டுப்பாடு இல்லை

 

காரைக்கால், டிச.9: காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி சாகுபடிக்கு உர தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 5,000 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மழை பெய்து ஓரளவுக்கு ஓய்ந்துள்ளதால் சாகுபடி பரப்பளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது மழை முடிந்து பூச்சி தாக்குதல் மற்றும் விவசாயிகள் பயிர்களுக்கு ஊட்டச்சத்து தெளிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்காலில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் மத்தியில் கருத்து நிலை வருகிறது.ஆனால் காரைக்காலில் நடப்பு சம்பா மற்றும் தாளடி ஆகிய சாகுபடிக்கு உர தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை.

தற்போது வரை காரைக்காலில் உள்ள அனைத்து பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் யூரியா 138 டன்னும், பொட்டாஷ் 20 டன், டிஏபி 2 டன், காம்ப்ளக்ஸ் உரம் 80 டன் என போதுமான அளவு உரம் கையிருப்பில் உள்ளது. மேலும் கூடுதலாக 50 டன் யூரியா பெறப்படுவதற்கு வேளாண் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.எனவே காரைக்கால் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு என்பது முற்றிலும் கிடையாது. எனவே விவசாயிகள் யாரும் அச்சமடைய தேவையில்லை.சாகுபடியை விவசாயிகள் நல்ல முறையில் செயல்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு சாகுபடிக்கு உரத்தட்டுப்பாடு இல்லை appeared first on Dinakaran.

Related Stories: