×

பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக குறியீட்டு எண் நிஃப்டி 21,000 புள்ளிகளை கடந்து சாதனை..!!

மும்பை: பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக குறியீட்டு எண் நிஃப்டி 21,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. காலை நேர வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 105 புள்ளிகள் அதிகரித்து 21,006 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. எச்.சி.எல். டெக் பங்கு 2.8%, எல்டிஐ மைன்ட்ரீ பங்கு 2.5%, ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் 2.4%, இன்ஃபோசிஸ் பங்கு 1.7% விலை உயர்ந்தன. அப்பல்லோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி பங்குகள் தலா 1.4%, எச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ பங்குகள் தலா 1.3% விலை உயர்ந்தன.

அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 1.9%, அதானி போர்ட்ஸ், ஐடிசி நிறுவன பங்குகள் தலா 1.7% விலை குறைந்து வர்த்தகமாயின. ஹீரோ மோட்டார்ஸ், எம் அண்ட் எம், டிவிஸ் லேப், பிரிட்டானியா பங்குகள் தலா 1.4%, ஓஎன்ஜிசி பங்கு 1.3% விலை குறைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பிற்பகலில் 322 புள்ளி உயர்ந்து 89,893.88 புள்ளி தொட்டு சாதனை படைத்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்வுடன் 69,826 புள்ளிகளில் நிறைவடைந்தது.

The post பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக குறியீட்டு எண் நிஃப்டி 21,000 புள்ளிகளை கடந்து சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : Nifty ,Mumbai ,Dinakaran ,
× RELATED இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது