×

சாத்தான்குளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்

சாத்தான்குளம், டிச. 8: சாத்தான்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். சாத்தான்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு
அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செல்லப்பாண்டியன் தலைமையில் சாத்தான்குளம் எஸ்ஐ எட்வின் ராஜதுரை மற்றும் போலீசார் பேய்க்குளத்தை சேர்ந்த பார்த்தீபன், சாலைப்புதூரை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததால் 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

The post சாத்தான்குளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா