×

அரசு நவீன அரிசி ஆலையில் காலிப்பணியிடம் நிரப்ப கோரிக்கை

திருவாரூர், டிச.8: ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் திருவாரூர் மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் மாநில அமைப்பு செயலாளர் ராஜீவ் காந்தி, பொறுப்பாளர்கள் காதர் மொய்தீன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவ கால பணியாளர்களுக்கு பிரதி மாதம் 7ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் இரு நவீன அரிசி ஆலைகளில் 50-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருந்து வருவதால் அதனை உடனடியாக நிரப்பிட வேண்டும். லாரி இயக்கத்தில் அதிகாரிகள் மூலம் தவறு நடைபெற்று வருவதை தடுத்திட இணையதளம் மூலமாகத்தான் டோக்கன் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பருவகால பணியாளர்கள் பணியின் போது மரணம் அடைந்தால், அவர்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், இயக்க இழப்புத் தொகையை பருவ கால பணியாளரிடம் வசூல் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அரசு நவீன அரிசி ஆலையில் காலிப்பணியிடம் நிரப்ப கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt Modern Rice Mill ,Tiruvarur ,Thiruvarur ,Zonal ,Working ,Committee ,INDUC Trade Union ,President ,Ambikapati ,Modern Rice Mill ,Dinakaran ,
× RELATED நில அபகரிப்பு வழக்கு: அதிமுகவை சேர்ந்த...