×

திருச்சிற்றம்பலம் அருகே வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

 

வானூர், டிச. 8: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே பூத்துறை சாலையில் உள்ள பெரிய பட்டானூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜேம்ஸ்(26). வழக்கறிஞரான இவர் வானூர் மற்றும் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டில் நேற்று காலை மர்ம நபர்கள் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளனர். ஜேம்ஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோதுதான் வீட்டின் போர்ட்டிக்கோவில் பெட்ரோல் நிரப்பி வீசிய பாட்டில் உடைந்து கிடந்தது தெரியவந்தது. அதையடுத்து அவர் அப்பகுதியில் பிற இடங்களில் பார்த்தபோது மற்றொரு பாட்டில் உடைந்த நிலையில் இருந்துள்ளது.

இது குறித்து அவர் ஆரோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். அங்கு உடைந்த நிலையில் இருந்த பாட்டில்களை சேகரித்து காவல்நிலையம் எடுத்து சென்று வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்து வருகின்றனர். வழக்கறிஞர் ஜேம்ஸ்க்கும் சில நபர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திருச்சிற்றம்பலம் அருகே வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Tiruchirappala ,Vanur ,Periya Pattanur ,Bhootura road ,Vanur taluka Tiruchirampalam ,Tiruchirampalam ,Dinakaran ,
× RELATED ஆரோவில் உதயதின விழாவில் நெருப்பு...