×

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு50 ஆயிரம் லிட்டர் பால்: மதுரை ஆவின் அனுப்பியது

 

மதுரை, டிச. 8: சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மதுரை ஆவின் சார்பில் மாவட்ட நிர்வாகம் வாயிலாக 50 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு எடுத்து வரும் மீட்பு நடவடிக்கைகள் காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருப்போர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை ஆவின் நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக 50 ஆயிரம் லிட்டர் பால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் முக்கியம் என்பதால், பாதிப்பிற்குள்ளான அனைத்து பகுதிகளுக்கும் பால் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு50 ஆயிரம் லிட்டர் பால்: மதுரை ஆவின் அனுப்பியது appeared first on Dinakaran.

Tags : Madurai Aavin ,Madurai ,Chennai ,Aavin ,
× RELATED சட்டவிரோத கட்டுமானம் அகற்றும் பணி...