×

இணையதளத்தில் வீடியோ வைரல்; பிரதமர் மோடி முன் கைகூப்பி குனிந்து நிற்கும் துணை ஜனாதிபதி: வலியும், வேதனையும் தருவதாக விளக்கம்

புதுடெல்லி: சமூக வலைத்தளங்களில் நேற்று ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் வரிசையாக நிற்க காரில் வந்து இறங்கும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடியை பார்த்து கைகூப்பி குனிந்து நிற்கிறார். ஆனால் மோடி அவரைப்பார்த்தபடி நிற்கிறார். பதிலுக்கு அவர் வணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் ரி டிவிட் செய்தனர். இதுபற்றி நேற்று மாநிலங்களவையில் துணைஜனாதிபதி தன்கர் வருத்தம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’யார் பணிகிறார், எந்தக் கோணத்தில் எவ்வளவு கிளிக் செய்து சமூக ஊடக தளங்களில் பதிவேற்றலாம் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். கூப்பிய கைகளுடன் குனிந்து வணங்குவது என் இயல்பு. முன்னால் யார் இருக்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை.

இது எனக்கு மிகவும் வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இயல்பிலேயே நான் தாழ்மையுடன் இருக்கிறேன், இல்லையென்றால் நான் மிகவும் அடக்கமாக இருக்க முயற்சிக்கிறேன். இதை நாம் கேலி செய்யக்கூடாது. ஒருவரை வாழ்த்தும்போது கும்பிடுவது நமது கலாச்சார பாரம்பரியம். நீங்கள் அதிகமாக கும்பிடும்போது அலுவலகத்தின் கண்ணியம் பாதுகாக்கப்படுகிறது. இந்த வலி நான் மிகவும் மதிக்கும் நபர்களால் எனக்கு வழங்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.

The post இணையதளத்தில் வீடியோ வைரல்; பிரதமர் மோடி முன் கைகூப்பி குனிந்து நிற்கும் துணை ஜனாதிபதி: வலியும், வேதனையும் தருவதாக விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vice President ,PM Modi ,New Delhi ,Modi ,Lok Sabha ,Speaker ,Om Birla ,
× RELATED பாஜக மாவட்ட துணை தலைவரை தாக்கிய வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது