மழைநீர் வடிகால் பணிகளை அரசு சிறப்பாக மேற்கொண்டதால் அம்பத்தூர் தொழிற்பேட்டை விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியது: டி.ஆர்.பி.ராஜா

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை அரசு சிறப்பாக மேற்கொண்டதால் அம்பத்தூர் தொழிற்பேட்டை |விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் மழைநீர் புகுந்ததால் முதல், இரண்டாம் அலகில் உள்ள தொழிற்சாலைகள் இயங்காமல் இருந்தன. மழைநீர் தேங்கி இருந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் இருந்தன. தற்போது முதல், இரண்டாம் அலகில் மழைநீர் வடிந்ததால் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆவின் பால் பண்ணை சாலையில் மழைநீர் மெதுவாக வடிந்து வருவதால் அங்கு இன்னும் மின்விநியோகம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இது குறித்து பேசியதாவது, 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தண்ணீர் வடிய சுமார் ஒரு வாரம் வரை ஆனது. தொழிற்துறையினரின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணியால் தற்போது மழைநீர் வேகமாக வடிந்துள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தண்ணீர் தேங்கியதற்கு ஏரிக்கரை ஆக்கிரமிப்புகளும் காரணம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். மழைநீர் முழுமையாக வடிந்ததால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இயல்பு நிலைக்கு திரும்பின. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் அலகில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் வழக்கமாக செயல்படத் தொடங்கியுள்ளனர். நேற்று மாலை முதல் மின்விநியோகம் வழங்கப்பட்டு சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post மழைநீர் வடிகால் பணிகளை அரசு சிறப்பாக மேற்கொண்டதால் அம்பத்தூர் தொழிற்பேட்டை விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியது: டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Related Stories: