×

பாகிஸ்தானுக்கு பயிற்சி அளிக்க ரெடி: அஜய் ஜடேஜா அதிரடி

புதுடெல்லி:‘பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி அளிக்க ஆயுத்தமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் துணைக் கேப்டன் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக 1992 முதல் 2000ம் ஆண்டு வரை விளையாடியவர் அஜய் ஜடஜா(52). மொத்தம் 196ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 5359ரன், 20 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும் 15டெஸ்ட்களில் விளையாடி உள்ளார். ‘சூதாட்ட புகாரில்’ சிக்கிய ஜடேஜாவுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது கிரிக்கெட் வாரியம். அதனை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும் அவர் உள்ளூர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.

ஆனால் பயிற்சியாளராக மாறினார். சமீபத்திய உலக கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜடேஜா வழிகாட்டி பயிற்சியாளராக இருந்தார். அந்த தொடரில் ஜடேஜாவின் ஆலோசனைகள் ஆப்கானிஸ்தான் அணியை கவனிக்க தக்க அணியாக மாற்றியது. குறிப்பாக முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகியவற்றை வீழ்த்தியது. ஆஸியும் தட்டு தடுமாறிதான் ஆப்கானை வென்றது. அதனால் ஜடேஜாவும் மீண்டும் கிரிக்கெட் உலகின் கவனத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஊடகம் ஒன்றில் பேசிய அஜய் ஜடேஜா, ‘எனக்கு தெரிந்தவற்றை ஆப்கான் வீரர்களிடம் பகிர்ந்துக் கொண்டேன். ஆப்கான் வீரர்களிடம் ஒற்றுமையும், சாதிக்க வேண்டும் என்ற உணர்வும் இருந்ததால் அவர்கள் வெற்றிகளை வசப்படுத்தினர். அவர்களின் முகத்துக்கு நேராக எதையும் சொல்லலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணி எப்படி இருந்ததோ, அப்படி இன்று ஆப்கான் அணி இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று கேட்டால், அந்த பொறுப்பை ஏற்க ஆயுத்தமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

களத்தில் மட்டுமல்ல, களத்துக்கு வெளியேயும் பாகிஸ்தான் அணியை எதிரி அணியாக பார்க்கும் இந்திய மனநிலையில், ஜடேஜேவின் ‘ஐ ஆம் ரெடி’ பதில் கவனம் ஈர்த்துள்ளது.

The post பாகிஸ்தானுக்கு பயிற்சி அளிக்க ரெடி: அஜய் ஜடேஜா அதிரடி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Ajay Jadeja ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் 6 பயங்கரவாதிகள் பலி