சென்னை: தொடர் கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மழைநீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளை நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ மற்றும் பழங்கள் வாங்குவதற்கு புறநகர் பகுதி சில்லரை வியாபாரிகளின் வருகை குறைவு காரணமாக மார்க்கெட் வளாகம் வெறிச்சோடியது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சூழ்ந்துள்ள மழைநீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளை அங்காடி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை ஏற்றி வந்த அனைத்து கனரக வாகனங்களும் மார்க்கெட் வளாகத்தை சுற்றியுள்ள சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. குறிப்பாக, பூ மார்க்கெட்டில் பூக்களை விற்க முடியாமல் மழைநீரில் நனைந்து சேதமானது. அவற்றை குறைந்த விலைக்கு கூவி விற்றாலும் வாங்குவதற்கு ஆளின்றி வியாபாரிகள் பெரிதும் வேதனைப்பட்டனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் வெள்ளம் பூ, காய்கறி, பழங்கள் விற்பனை பாதிப்பு: வியாபாரிகள் வேதனை appeared first on Dinakaran.
