- நோய் தடுப்பு மருத்துவ முகாம்
- அரூர்
- தர்மபுரி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை
- தின மலர்
அரூர், டிச.3: வாராந்திர சுகாதார திருவிழாவை முன்னிட்டு, தர்மபுரி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நல்வாழ்வு காண்போம் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.
அருர் எம்எல்ஏ சம்பத்குமார் முகாமை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1,213 பேர் கலந்துகொண்டனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு, குழந்தை நலம், மகப்பேறு, எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை நோய், இதய நோய் பரிசோதனைகள் செய்து ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
மேலும் பொதுமக்களிடம் உடல் உறுப்பு தானம், ரத்த தானம், கண் தானம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. வருமுன் காப்போம், டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, காசநோய், தொழுநோய் குறித்த கண்காட்சியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இயங்கும் கதிர் வீச்சு வாகனம் முலம் காசநோய் கண்டறிய எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், இணை இயக்குனர் நலப்பணிகள் சாந்தி, மாவட்ட காசநோய் அலுவலர் பிரியதர்சிணி, வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன், தீர்த்தமலை மருத்துவ அலுவலர் கார்த்திக், கண் மருத்துவ உதவியாளர் கலையரசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவலிங்கம், பகுதி சுகாதார செவிலியர் மலர்விழி, சுகாதார ஆய்வாளர் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நோய் தடுப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.
