சின்னூர் மலைக்கிராமத்திற்கு செல்லும் கல்லாற்று பகுதியில் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

பெரியகுளம், டிச. 3: பெரியகுளம் அருகே உள்ள மேற்கு மலைத்தொடர்ச்சியில் சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த மலைக்கிராமங்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் இருந்தாலும், மலைக்கிராம மக்களின் போக்குவரத்து என்பது பெரியகுளம் பகுதியைச் சார்ந்தே உள்ளது. இந்த மலைக்கிராம மக்கள் சாலை வசதியின்றி தவித்து வருவதாகவும், மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் கூறுகின்றனர். கடந்த வாரம் ஆற்று வெள்ளத்தில் ஒரு குடும்பத்தினர் சிக்கிக் கொண்ட நிலையில் கிராம மக்கள் மீட்டனர்.

இந்த கிராம மக்கள் சாலை வசதி மற்றும் கல்லாற்றைக் கடப்பதற்கு பாலம் அமைத்து தர வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, நேற்று திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் சாலை ஆய்வாளர் தலைமையில், வருவாய்த் துறையினர் சின்னூர் மலைக்கிராமத்திற்கு செல்லும் கல்லாற்று பகுதியில் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அளவீடு செய்யும் பணியையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் ஆய்வுக்கு பின் உதவி பொறியாளர் மணிகண்டன் கூறுகையில், ‘‘ விரைவில் மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி மற்றும் பாலம் கட்டும் பணிகள் துவங்கப்படும்’’ என்றார்.

The post சின்னூர் மலைக்கிராமத்திற்கு செல்லும் கல்லாற்று பகுதியில் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: