×

பிளாஸ்டிக் கேரி பேக்; ரூ.3 லட்சம் அபராதம்

 

கோவை, நவ.3: தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்துள்ளது. இதனை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இருப்பினும் அரசின் தடையை மீறி கோவையில் பல்வேறு கடைகள், தள்ளு வண்டி கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் ஆய்வு செய்தனர். மொத்தம் 2,079 கடைகளுக்கு 3.08 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் கடந்த மாதம் 532 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

The post பிளாஸ்டிக் கேரி பேக்; ரூ.3 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கோவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு