சிம்லா ராணுவ பயிற்சி தலைமையகத்தின் ஜெனரல் அதிகாரியாக மஞ்சிந்தர் சிங் பொறுப்பு

சென்னை: கர்னல் ஆப் தி மெட்ராஸ் ரெஜிமென்ட் லெப்டினன்ட் மஞ்சிந்தர் சிங் சிம்லா ராணுவ பயிற்சி தலைமையகத்தின் 24வது ஜெனரல் அதிகாரியாக பொறுப்பேற்றார். சைனிக் பள்ளி கபுர்தலா, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா மற்றும் இந்திய ராணுவ அகாடமி, டேராடூனில் மஞ்சிந்தர் சிங் பயிற்சி பெற்றவர். 1986ல் மெட்ராஸ் படையில் 2வது லெப்டினன்ட் அதிகாரியாக ராணுவ வாழ்க்கையை தொடங்கினார். மேலும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகுந்த திறமையைக் காட்டியவர்.

2015ம் ஆண்டு யுத் சேவா பதக்கமும் 2019ம் ஆண்டு விஷிஷ்ட் சேவா பதக்கமும் பெற்றவர். 2021ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மஞ்சிந்தர் சிங், படைப்பிரிவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி நிலையத்தின் தரத்தினையும் மற்றும் நிர்வாகத் தேவைகளையும் உயர்த்தியுள்ளார். இந்நிலையில் ராணுவப் பயிற்சி தலைமையகத்தின் தலைமை அதிகாரியாக பதவியேற்றுக்கொண்ட ஜெனரல் மஞ்சிந்தர் சிங்கிற்கு அவருடன் பணியாற்றிய வீரர்களும், குடும்பத்தினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

The post சிம்லா ராணுவ பயிற்சி தலைமையகத்தின் ஜெனரல் அதிகாரியாக மஞ்சிந்தர் சிங் பொறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: