×

ரூ.9,760 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: பொதுமக்களிடம் உள்ள ரூ.9,760 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னமும் திருப்பி தரப்படாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு அதற்கு பதில் ரூ.2000 நோட்டு அறிமுகமானது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை மாற்றிக்கொள்ள செப்.30 வரை காலக்கெடு அளிக்கப்பட்டு, அது அக்.7 வரை நீட்டிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகம் மூலம் வங்கி கணக்கில் வரவு அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கில் வரவு வைக்கலாம். இல்லாவிட்டால் மாற்று மதிப்பு நோட்டுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மே 19ல் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் இருந்தன. நவம்பர் 30ம் தேதி முடிவில் ரூ.9,760 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திருப்பி தராமல் இன்னமும் மக்களிடமே உள்ளது’ என தெரிவித்தது.

The post ரூ.9,760 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,MUMBAI ,Dinakaran ,
× RELATED கனமழை எதிரொலி: மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு