×

அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்.

சென்னை: அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை, கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும்- ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள். appeared first on Dinakaran.

Tags : MINISTER ,TAMIL ,NADU ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பணிக் காலத்தில் இறந்த அரசு...