×

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

 

திண்டுக்கல், டிச. 1: திண்டுக்கல்லில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசின் மாற்றுத்திறனாளி களுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் திண்டுக்கல்லில் வட்டார வள மேலாளர், மகளிர் திட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள் கிராமப் பகுதிகளில் தகவல்களை சேமிப்பவர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.

The post மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Collector ,Bougodi ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை...