×

துரித உணவுகளை தவிர்த்து நோயின்றி வாழ மருந்தே உணவு என்ற முறைக்கு மீண்டும் மக்கள் மாற வேண்டும்: மதுரையில் நடந்த பயிலரங்கில் அறிவுறுத்தல்

 

மதுரை, டிச. 1: மதுரை இந்திய மருத்துவ கழக அரங்கில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட விளைபொருட்களின் மீதான நுகர்வோர் விருப்பங்கள் மற்றும் அதன் தேர்வுகளை மேம்படுத்தும் விதமாக பயிலரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்னவேல் கலந்து கொண்டு பேசியதாவது: பாரம்பரியமான இயற்கை உணவுகளை மக்கள் எடுத்து கொள்ள வேண்டும். நோய் பாதித்த நோயாளிகளுக்கு தேர்ந்தெடுத்த இயற்கையான சத்தான பாதுகாப்பான உணவுகளை வழங்க வேண்டும்.

தற்போது கண்டறியப்படாத மற்றும் ஆய்வு நிலையிலேயே உள்ள பல்வேறு நோய்கள் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தருகிறார்கள். இதனால் பாதுகாப்பான நஞ்சு இல்லா இயற்கை உணவை மக்கள் பழக்கமாக்கி கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். மருந்தே உணவு என்ற முறைக்கு மீண்டும் மக்கள் மாற வேண்டும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக கிரியேட் அமைப்பின் தலைவர் பேராசிரியர் துரைசிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ‘அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பாரம்பரிய இயற்கை உணவகங்களை திறக்க வேண்டும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கழகத்தின் மதுரை கிளை தலைவர் டாக்டர் அழகு வெங்கடேசன், மருத்துவர் பழனிவேல்ராஜன், தியாகராஜர் கல்லூரி உதவிப் பேராசிரியர் கார்த்திகேயன், மருத்துவர் வேலாயுதம், பாக்யலட்சுமி, ஆதப்பன், கெளதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சுரேஷ் கண்ணா தொகுத்து வழங்கினார். சதிஷ்குமார் நன்றி கூறினார்.

The post துரித உணவுகளை தவிர்த்து நோயின்றி வாழ மருந்தே உணவு என்ற முறைக்கு மீண்டும் மக்கள் மாற வேண்டும்: மதுரையில் நடந்த பயிலரங்கில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Indian Medical Institute ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...