×

மதுரை மாவட்டத்தில் டிச.4 முதல் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு பதிவுகள் செயலி மூலம் கணக்கெடுப்பு

மதுரை, டிச. 1: மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு பதிவுகள் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் வரும் டிச.4ம் தேதி துவங்குகிறது என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: மதுரை மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு பதிவுகள் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கென தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கதிதில் பணிபுரியும் 587 களப்பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கணகெடுப்பு பணிகள் வரும் டிச.4ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணிகள் மதுரை மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெறவும், மாற்றுத்திறனாளிகள் விடுபடா வண்ணம் கணக்கெடுப்பு நடத்திடவும் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து தறை அலுவலர்களுக்கான ஒருகிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மாவட்டத்தில் டிச.4 முதல் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு பதிவுகள் செயலி மூலம் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...