×

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி கிலோ ரூ.20க்கு விற்பனை

மதுரை, டிச. 1: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் தலைவர் சின்னமாயன் கூறியதாவது: தற்போது தேனி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் அதிகளவில் பச்சை மிளகாய் பயிரிடப்படுகிறது. மேலும் அங்கு தற்போது விளைச்சல் அதிகமாக இருப்பதால் பச்சை மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய், தற்போது கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது’ என்றார்.

மேலும் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை பட்டியல் விபரம் வருமாறு: (ஒரு கிலோவிற்கு) சின்ன வெங்காயம்- கிலோ ரூ.70, பெரிய வெங்காயம்-ரூ.40, சுரைக்காய்-ரூ.20, கருவேப்பிலை ஒரு கட்டு-ரூ.40, புதினா ஒரு கட்டு-ரூ.30, மல்லி -ரூ.30, இஞ்சி-ரூ.30, மிளகாய்-ரூ.20, கத்தரிக்காய்-ரூ.80, பாகற்காய்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.50, சீனிஅவரைக்காய்-ரூ.40, மாங்காய்-ரூ.60, பீன்ஸ்-ரூ.80, நைஸ்அவரை-ரூ.70, முருங்கைக்காய்-ரூ.80, கேரட்-ரூ.20, பட்டாணி-ரூ.150, சவ்சவ்-ரூ.20, குடை மிளகாய்-ரூ.70, பீட்ருட்-ரூ.30, முள்ளங்கி-ரூ.25, மொச்சை-ரூ.50, டர்னிப்-ரூ.40, சேனை-ரூ.50, சேம்பு-ரூ.70, கருணை-ரூ.40, உருளை-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.30, கோவக்காய்-ரூ.30.

The post மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி கிலோ ரூ.20க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Central Market ,Madurai Mattuthavani ,President ,Chinnamayan ,Theni ,Andipatti ,Otanchatram ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...