×

ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்ப பயிற்சி: கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்

 

ராமநாதபுரம், டிச.1: ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத்தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் நடத்தும் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் நுட்பங்கள் என்ற ஒருவார பயிற்சி 22.11.2023 முதல் 29.11.2023 வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், உதவி இயக்குநர் குமரவேல், ராமேஸ்வரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் தானியங்கி பொறியாளர் சிவசுடலைமணி வரவேற்றார். அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேசும்போது, ‘‘மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடலில் இருக்கும்போது படகு என்ஜினில் பழுது ஏற்பட்டால் மீனவர்களே பழுது நீக்குவதற்கு இப்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். மேலும் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகமும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து சரியான தருணத்தில் இப்பயிற்சியைக் கொடுத்து இருப்பது பாராட்டக்குறியது என தெரிவித்தார்.

இயக்குனரகத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கலையரசன் பேசும்போது, ஆழ்கடல் மீன்பிடிப்பின் வளர்ச்சியின் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், இந்த ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியின் போது ஆழ்கடல் பீலிக்கணவாய் மீன்பிடித் தொழில்நுட்பம், கடல்சார் மின்னணு சாதனங்களைக் கையாளுதல், உலகளாவிய இருப்பிடம் காட்டி (ஜி.பி.எஸ்) மற்றும் மீன் கண்டுபிடிப்பான்கள் செயல்முறை விளக்கம், மாலுமிக்கலை வரைபடங்கள், மாலுமிக்கலை ஒலிச் சமிக்கைகள் மற்றும் கடற்பயண விதிகள், ஆழ்கடல் மாலுமிக்கலை செயல்முறை விளக்கம், ஆழ்கடல் மீன்பிடிப் படகில் ஆழ்கடல் மீன்பிடி வலைகள் செயல்முறை விளக்கம், கடைசல் பனிப்பட்டறை, இயந்திர செயல்முறை விளக்கம்.

கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு, ஆழ்கடல் வானிலை, ஆழ்கடல் செவுள் வலை மற்றும் ஆயிரங்கால் தூண்டி வடிவமைப்பு, தீயணைப்பு முறைகள் மற்றும் செயல்விளக்கம், கடல் எஞ்சின் பராமரிப்பு செயல்முறை விளக்கம், பாதுகாக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்கள், ஆழ்கடல் மீன்வளம் – தற்போதைய நிலை முன்னேற்ற சாத்திய கூறுகள், நீர்உயிரின பாதுகாப்புச் சட்ட விளக்கம், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் மீன்களைக் கையாளுதல் மற்றும் உறைபதனம் செய்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் மீனவர்களுக்கு பயன்தரும் வகையில் வழங்கப்பட்டது.

The post ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்ப பயிற்சி: கலெக்டர் சான்றிதழ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Fisheries Industry Conservation and Vocational Training Directorate ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் முக்கிய இடங்களில் சிக்னல் அமைப்பு