×

போக்குவரத்து விதிமீறிய 39 வாகனங்கள் பறிமுதல்

ஓசூர், டிச.1: ஓசூரில், போக்குவரத்து விதிமீறிய 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லிசாமி ஆகியோரது உத்தரவின்பேரில், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி முன்னிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் மற்றும் அதிகாரிகள் நிலை1 மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த ஒரு மாதமாக 387 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், தகுதிச்சான்று புதுப்பிக்கபடாதது மற்றும் அனுமதி சீட்டு இல்லாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிக பாரம் ஏற்றி வந்தது என 46 வாகனங்கள் மீது மொத்தம் ₹8.05 லட்சம் இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேலும், ₹1.44 லட்சம் வரி வசூலிக்கப்பட்டு, 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post போக்குவரத்து விதிமீறிய 39 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Chennai ,Traffic Commissioner ,Shanmugasundaram ,Vellore… ,Dinakaran ,
× RELATED ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’...