முட்டை விலை 20 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை 510 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், என்இசிசி நேற்று முட்டை விலையில், 20 காசுகள் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் விலை 490 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விலை குறைந்து வருகிறது.

இதனால் முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை, என்இசிசி குறைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலையில் 40 காசுகள் வரை குறைந்துள்ளது. அதே போல், பல்லடத்தில் ஒரு கிலோ கறிக்கோழியின் விலை நேற்று ₹72ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post முட்டை விலை 20 காசு குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: