×

சமாதான திட்டத்தில் வணிக வரி தள்ளுபடி, வழக்குகள் தீர்வு: முதல்வருக்கு திமுக வர்த்தக அணி பாராட்டு

 

தொண்டாமுத்தூர், டிச.1: கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அறிவுரையின் படி வடக்கு மாவட்ட வர்த்தகர் அணியின் ஆலோசனை கூட்டம் அதன் அமைப்பாளர் ஏ.கே வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வர்த்தகர் அணி சார்பாக கோவை வடக்கு மாவட்டம் முழுவதும் தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவது,

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் நாளை 2ம் தேதி நடக்க இருக்கும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் சேலத்தில் டிசம்பர் 17ம் தேதியில் நடக்க இருக்கும் 2வது இளைஞர் அணி மாநாட்டில் திரளான இளைஞர்களை கலந்து கொள்ள செய்வது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்த சமாதான திட்டத்தின் மூலம் வணிகர்களுக்கு வரி தள்ளுபடி மற்றும் வணிக வரி வழக்குகள் தீர்வு முறைக்கு வணிகர்கள் சார்பாக நன்றிகள் கூறி இத்திட்டத்தை, அதிக வணிகர்களிடம் கொண்டு சேர்ப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post சமாதான திட்டத்தில் வணிக வரி தள்ளுபடி, வழக்குகள் தீர்வு: முதல்வருக்கு திமுக வர்த்தக அணி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DMK ,Thondamuthur ,Coimbatore ,DMK District ,Thondamuthur Ravi ,North ,
× RELATED கலைஞர் நினைவிடத்தில் கோவை திமுக கலைஞர்கள் பறையிசைத்து நடனம்