×

பள்ளிகளுக்கு இடையிலான தடகளப்போட்டி

 

கோவை, டிச.1: 27 பள்ளிகள் கலந்து கொண்ட தடகளப்போட்டி கோவை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட 600 பேர் கலந்துகொண்டனர். 10 வயதிற்கு உட்பட்ட குண்டு எறிதல் போட்டியில் பி.எஸ்.ஜி பொதுப்பள்ளி மாணவர் நகுல் முதலிடம் பெற்றார். அதேபள்ளியை சேர்ந்த மாணவர் சாய் கிருஷ்ணா இரண்டாம் இடமும், நேவி குழந்தை பள்ளி மாணவர் ஆதித்யா மூன்றாம் இடம் பிடித்தனர்.

8 வயதிற்கு உட்பட்ட நீளம் தாண்டுதல் போட்டியில் எல்.ஜி பள்ளி மாணவர் ஸ்வரன் ராஜ் முதலிடமும், ஸ்மார்ட் மாடன் பள்ளி மாணவர் நீர்மித் உதிப் இரண்டாம் இடமும், கண்ணம்மாள் நேஷனல் பள்ளி மாணவர் மாஹிர் அகமத் மூன்றாம் இடமும் பிடித்தனர். 10 வயதிற்கான உயரம் தாண்டுதல் போட்டியில் சாகர் பன்னாட்டு பள்ளி மாணவர் நித்திஷ் குமார் முதலிடம் பெற்றார். நேவி குழந்தை பள்ளி மாணவர் ஹர்ஷவர்த்தன் இரண்டாம் இடமும், கேம்போர்ட் பள்ளி மாணவர் வருண் சாஸ்திக் மூன்றாம் இடம் பெற்றனர்.

10 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் விவேகானந்தா அகாடமி பள்ளி மாணவி ஆதிரா ஸ்ரீ முதலிடம் பெற்றார். கேம்போர்ட் பள்ளி மாணவி சாம்பவி இரண்டாம் இடமும், பி. எஸ். ஜி பொதுப்பள்ளி மாணவி தனுஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர். 10 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்மார்ட் மாடன் பள்ளி மாணவி ஆருத்ரா முதலிடமும், சாகர் பன்னாட்டு பள்ளி மாணவி அனன்யா இரண்டாம் இடமும், விவேகானந்தா அகாடமி பள்ளி மாணவி தர்ஷனா மூன்றாம் இடமும் பெற்றனர்.

The post பள்ளிகளுக்கு இடையிலான தடகளப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Nehru Indoor Stadium ,Inter-School Athletic Competition ,Dinakaran ,
× RELATED முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது