அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான விவசாய தொழிலாளர்களின் சமூக, பொருளாதார வாழ்க்கை நிலைகளில் தொடர்ந்து மேம்பாடு காணும் வகையில், 1999ல் கலைஞர் ஆட்சியில் இருந்ததை போன்று தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்.
கோவை, மதுரை, ஈரோடு, திருப்பூர், சென்னை, அம்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் குறு, சிறு தொழிலில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு போராடி வருகின்றனர். இதன் மீது தலையிட்டு, தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்:இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் முதல்வரிடம் நேரில் கோரிக்கை appeared first on Dinakaran.
